கொட்டாரம் பகுதியில் பிரசவத்தின் போது இளம்பெண் இறந்த சம்பவத்தையடுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான பவித்ரா கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இன்று காலை சுமார் 7 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பவித்ராவுக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதால் கன்னியாகுமரி அருகே உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போதிய வசதி இல்லை எனக் கூறி, அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெருமாள்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் இறந்தார் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
பிரசவத்தில் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






0 Comments