அமெரிக்காவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகின் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை கொண்ட முதன்மையான நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் பாதிப்புகளும் இறப்பும் அதிகரித்து வருகிறது.
இதுவரை அங்கு கொரோனாவால் 54,16,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதோடு 1,70,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் அங்கு இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு இர்றுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் இதனை அனைத்து மக்களுக்கும் இலவசமாக வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை மூத்த அதிகாரி பால் மாங்கோ, 6 தடுப்பூசி திட்டங்களில் வாஷிங்டன் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (சுமார் ரூ. 74,000 கோடி) முதலீடு செய்துள்ளது. மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் வழங்குவதற்கான உத்தரவாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்கா முதலீடு செய்த ஆறு தடுப்பூசிகளில் குறைந்தபட்சம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஜனவரி 2021 க்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸை வழங்குவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி அளவுகள் அரசாங்கத்தால் செலுத்தப்படும். அவற்றை நிர்வகிக்கும் மருத்துவர்கள் அல்லது கிளினிக்குகளால் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும், ஆனால் இந்த செலவுகள் பெரும்பாலும் தனியார் மற்றும் பொது காப்பீட்டாளர்களால் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் பெரும்பாலான" வணிக காப்பீட்டாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தடுப்பு மருந்துக்கான செலவை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






0 Comments