இப்போது இறந்துவிட்டு அடுத்த ஜென்மத்தில் கோடீஸ்வரர்களாக பிறக்கலாம் என்று மந்திரவாதி ஒருவர் சொன்னதை நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி, சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள்.

இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி பூஜைகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த 60 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், 40 வயது ஆண் மற்றும் 10 வயது சிறுமி ஆகியோர் விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
நால்வரும் உடலும் வீட்டின் பின்புறம் கிடந்தது. அருகிலேயே பூஜை நடைபெற்றதற்கான தடயங்களும் இருந்தன. இந்நிலையில் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பிடித்த மாதிரி பிறக்கலாம் என்று மந்திரவாதி கூறியதை நம்பி அவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வயது சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால், வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.






0 Comments