கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நம்பாளி கிளை சார்பாக நம்பாளியில் வைத்து இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நம்பாளி கிளை தலைவர் முஹம்மது தாரிக், கிளை செயலாளர் சபீக் அகமது தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுசெயலாளர் ஹிமாம் பாதுஷா முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் ஏ.மீரான் மைதீன் அவர்களால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 520 மதிப்பெண் பெற்ற நம்பாளியை சேர்ந்த மாணவர் முகம்மது இர்பானுக்கு சான்றிதழும்,, கேடயமும், ரூ.2500 பரிசுத் தொகையும் நம்பாளி கிளையின் ஏற்பாட்டில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொதுசெயலாளர் ஹிமாம் பாதுஷா அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நசீர் உசேன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சிவாஜி, இளைஞரணி தலைவர் எஸ்.ஏ. முகம்மது அயூப் கான், மாவட்ட வர்த்தகப்பிரிவு செயலாளர் மாலிக்கீன், பொருளாளர் சலீம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஸ்கர், மற்றும் நம்பாளியை சார்ந்த எம்.பி.முகம்மது அப்துல் அசீஸ், முகம்மது கடாபி, சமீர் அஹமது தாசீன், அல் அமீன், செய்யது அலி, ஷாஜஹான், அயூப் கான், அக்கீல், ரைஹான், முஹம்மது இர்பான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.