ஆட்டோ, கார், மேக்ஸி கேப் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தல் நடந்தது.
ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சாலை வரிகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஊரடங்கு காலத்தில் வாகன தவணைகளுக்கு விதிக்கப்பட்ட வட்டி மற்றும் அபராதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வலியுறுத்தினர்.