ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவ அலுவலர் ஆறுமுக வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.