ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து நேற்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. நேரில் வந்து பார்வையிட்டார்.

பின்னர் ஆலை அதிகாரிகளிடம் கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் வரை ஆலையை இயக்கக் கூடாது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் பூரண நலம் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பும் வரையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது, ஒன்றிய தி.மு.க செயலாளர் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், செல்வகுமார், மகராஜ பிள்ளை, அய்யம் பெருமாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






0 Comments