நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதியில் ஒரு வாடகை வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றனர். நள்ளிரவு நேரத்திலும் அந்த வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்தபகுதி மக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் ஒரு ஆணும், பெண்ணும் அரைகுறை ஆடையில் இருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த ஆண் தப்பி ஓட முயன்றார். ஆனால், போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்தனர். இதே போல அந்த வீட்டில் இருந்து மேலும் 2 பெண்கள் மற்றும் 2 புரோக்கர்கள் பிடிபட்டனர்.
அவர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் வாடகை வீட்டில் விபசார கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






0 Comments