உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 18.08 லட்சம் பேர் தொற்றில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பினர்.தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு,மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது.
உலகளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது.

அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது.பிரேசிலை தொடர்ந்து இந்தியா இதில் 2-வது இடத்தில் உள்ளது.