கல்குளம் தாலுகா அலுவலகம் முன் உட்பட 10 இடங்களில் சிபிஐ (எம்எல்) சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கோரிக்கை எழுந்தது. 3, 5, 7 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்டன எதிர்ப்பு கோரிக்கை நடந்தது.

முஞ்சிறை, சுங்கான்கடை, தக்கலை, இரணியல், குளச்சல், மார்த்தாண்டம், தொலையாவட்டம், அகஸ்தீஸ்வரம், தோவாளை உட்பட 10 இடங்களில் நடந்தது. கல்குளம் தாலுகா அலுவலகம் முன் நிகழ்ச்சிக்கு லைசட் தலைமை தாங்க மரிய கமலம் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்திரா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற 10 வயது சிறுவன் உட்பட போராட்டக்காரர்கள் மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்தனர்






0 Comments