நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள், பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் மாடுகள், ஆடுகள் சுற்றி திரிவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக மாநகராட்சி ஆணையரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாஆதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மகாதேவன் பிள்ளை, ஜாண், ராஜேஷ், ராஜா ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகள், ஆடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகள், ஆடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தால் அதன் பிறகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படாது எனவே மாடுகள், ஆடுகளை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் படி விட வேண்டாம் என்று மாநகர் நல அலுவலர் கின்சால் தெரிவித்தார்.