கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் சுதேஷ்தர்சன் திட்டத்தின் கீழ் நடந்து வரும் படித்துறை, அரை வட்டம் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் உட்பட பலர் இருந்தனர்.