உலகை முழுவதுமாக தனது கோரக்கைகளின் பிடியில் வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பாவி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சிகிட்சை அளிப்பது பெரும் சவாலாகவே நீடித்து வருகிறது. பல்வேறு மருத்துவ முறைகளில் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், நுரையீரலை பாதித்து மூச்சுத்திணறலை உருவாக்கும் இந்த நோய்க்கு சிகிட்சையாக யோகா பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.

யோகாவின் பயன் அறிந்து பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் கற்று தரப்படுகின்றன. பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட் தலைமையிலான குழு யோகா பயிற்சி அளிக்கிறார்கள்.
இது குறித்து மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட் அவர்கள கூறும்போது, கொரோனா நோயாளிகளுக்கு யோகா சிகிட்சை முறைகள் ஒரு சிறந்த தீர்வாகும். தொடர்ந்து யோகா பயிற்சிகள் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு புத்துணர்ச்சியும் அடையலாம். மூச்சு பயிற்சிகள் நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை அதிகரித்து நுரையீரல் கொள்ளளவை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான பிராண வாயு அதிகரிக்கிறது. சுவாசம் சீராகும் எளிதாகும். மூச்சுத்தினறல் சரியாகும். அலர்ஜி மாறும்.

மனதளவில் உள்ள பதட்டம் குறையும். பயம் மறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மொத்தத்தில் கொரோனா நோயிலிருந்து குணமடைவதற்கு யோகா பயிற்சிகளும் சிறந்ததாகும். எனவே இங்கு தினமும் யோகா சிகிட்சைகள் தருகின்றோம்.
இயற்கை நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் பானங்கள், இயற்கை மருத்துவ சிகிட்சைகள் அளிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்






0 Comments