திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை பிளே பாய் என்று விமர்சித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க ஐந்து மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் திணறி, ஒருகட்டத்தில் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து தாண்டவமுத்துவிற்கு ஆட்டோ வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி என தெரிவித்தார்.
அத்துடன் பாஸ் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய உதயநிதியிடம் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சாக்லேட் பாய் என்று விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், 'சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்., ஒரு பிளேபாய்" என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.






0 Comments