நாகர்கோவில் மாநகராட்சி வேப்பமூடு பூங்காவில் கார்கள், பைக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்களில் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் பூங்காக்கள் அடைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு பூங்காவும் அடைக்கப்பட்டது. இதனால் வேப்பமூடு பகுதிகளில் பைக்குகள், கார்கள் அதிகமாக சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு வந்தது. இது அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கும் சில நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்தியது.
தற்போது ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி வேப்பமூடு பூங்கா திறக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் பூங்காவிற்குள் கட்டணம் செலுத்தி பார்கிங் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பூங்காவிற்குள் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.






0 Comments