கேரளாவிற்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்து விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார். விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜ் கொண்ட குழு குழித்துறை அருகே வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர் .. அந்த பிக்கப் வேன் நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து பவேனை சுமார் 5 கிலோமீட்டர் துரத்தி சென்று களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வண்டியை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. பிறகு கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.






0 Comments