ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்ட் கிழக்கு பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில், தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணியை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள் ராஜ், பொருளாளர் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.