கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் திருமணம் நடத்த கலெக்டரின் அனுமதி ஆணை பெறுவதற்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (19 ம் தேதி) முதல் திருமணம் நடத்த மாவட்ட கலெக்டரின் அனுமதி ஆணை பெறுவதற்கு marriagepasskkm@gmail.com என்ற மின்னஞ்சல் ( இமெயில் ) மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் . இதற்கான விபரங்கள் , என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் , நிபந்தனைகள் விபரம் , உறுதிமொழி படிவம் கன்னியாகுமரி மாவட்ட இணையதளமான kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் விபரங்களை அறிந்து உரியவாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.